வாடிப்பட்டியில் நலம் நாடுவோர் கருத்தரங்கு

வாடிப்பட்டியில் நலம் நாடுவோர் கருத்தரங்கு


வாடிப்பட்டி, பிப்.19-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாசன் கண் மருத்துவமனை சார்பாக நலம் நாடுவோர் கருத்தரங்கு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மகாலில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு வாசன் கண் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கமல் பாபு தலைமை தாங்கினார். கிராம முக்கிய பிரமுகர்கள் சி.காந்தி, கிருஷ்ணன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துமணி, அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் செல்வகுமார் வரவேற்றார். இந்த கருத்தரங்கில்

டாக்டர்கள் பிரேம்குமார்,கோபால் அர்ச்சனா, சௌந்தர்யா ராகினி ஆகியோர் கண் நோய்கள், கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும்

அறுவை சிகிச்சை பற்றி விளக்கி பேசினர். இதில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு வழக்கறிஞர்கள், அரிமா சங்க நிர்வாகிகள்,மகளிர் குழு நிர்வாகிகள்,விவசாய சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை வாசன் கண் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%