news Breaking News
clock

வட்டியுடன் வாழ்வு கணக்கு.

வட்டியுடன் வாழ்வு கணக்கு.


கட்டிலிலே.. பெற்றவர்கள் கலந்தாடியதாலே..

தொட்டிலிலே பிள்ளைகளாய் 

நாமாடினோமே..!

பட்டிவிட்டு வெளிவந்து தெருவினிலே.. மண்ணிலே மழலையராய் ஆடினோமே..! 

கட்டிளம் காளையராய்.. கன்னியராய் காதலிலே கண்ணசைத்து ஆடினோமே..!

பெட்டியிலே.. பணம் பணம்..என்று பின்னர் ஊரெல்லாம் ஊர்ந்து போய் ஆடினோமே..

நெட்டி நம்மை தள்ளிவிடும் காலம்.. வயது.. நினையாமல் ஆடும் வரை ஆடினோமே..! கட்டி வைத்த பாசக்கயிற்றை அவன் இழுக்க.. கண்மூடி பெட்டியில் கண் மூடினோமே..! எட்டி நட.. எடும் எனறே.. ஊரார் அரற்ற.. காலில்லா கட்டிலிலே நால்வர் தூக்க.. கல்லறைக்கு ஒருநாளில் ஓடினோமே!

அட்டியில்லா மனித்த வாழ்வு இதுதான் என்றே

தத்துவங்கள் பேசி.. பின் வாய் மூடினோமே.!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News