news Breaking News
clock

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் உள்பட 9 பேர் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் உள்பட 9 பேர் கைது


 

திருப்பூர்,


திருப்பூரில் உள்ள பனியன் உள்பட பல்வேறு நிறுவனங்களில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.


இதையடுத்து கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்க தேசத்தினரை கைது செய்து வருகின்றனர். அதன்படி நல்லூர் முஜியாபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில், வங்கதேசத்தினர் தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வங்க தேசத்தை சேர்ந்த சைபுல் இஸ்லாம் (வயது 26), ரஹதுல்லா (28), மோரியம் (27), ஷாஹ்ரியாலம் (28), தோஹமினா ஆக்டர் (29) மற்றும் 2 பெண்கள் என 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முறையாக ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த போலி ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News