தொழிலதிபரின் வீட்டில் ரூ.18 கோடி நகைகள் திருட்டு: பெங்களூருவில் நேபாள தம்பதி கைது

தொழிலதிபரின் வீட்டில் ரூ.18 கோடி நகைகள் திருட்டு: பெங்களூருவில் நேபாள தம்பதி கைது


 

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் ரூ.18 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகளை திருடிய நேபாள நாட்டை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏமலூருவை சேர்ந்தவர் ஸ்ரீமந்த் அர்ஜுன் (28). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தனது மனைவி ஷீலா (25), தந்தை சிவக்குமார் (58), தாய் ஜெயந்தி (54) ஆகியோருடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். இவரது வீட்டில் அம்பிகா (34) என்ற சமையல் பணியாளரும், சித்தராமா (37) என்ற ஓட்டுநரும் பணியாற்றி வருகின்றனர்.


ஸ்ரீமந்த் அர்ஜுன் தனது வீட்டின் தோட்டப் பணிகளுக்காக தினேஷ் (32), அவரது மனைவி கமலா (25) ஆகிய இருவரை வேலைக்கு நியமித்துள்ளார். இருவரையும் தனது வீட்டின் மேல்மாடியில் தங்க வைத்தார்.


இந்நிலையில் ஸ்ரீமந்த் அர்ஜுன் கடந்த 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுள்ளார். மதியம் 12.30 மணியளவில் சமையல் பணியாளர் அம்பிகா அவரை தொடர்பு கொண்டு படுக்கை அறையில் உள்ள லாக்கர் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீமந்த் அர்ஜுன் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் ரூ.18 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ.11.5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


புகாரின் அடிப்படையில் மாரத்தஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழக்க செய்யப்பட்டிருந்தது. தினேஷ், கமலா தலைமறைவாகி இருந்தனர்.


விசாரணையில் அவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் செல்போன் எண்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களின் செல்போன் எண்களை வைத்து கண்காணித்தனர். பின்னர் உறவினர் மகேஷ் வின்ஷூ (33) என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க, வைர நகைகளை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%