news Breaking News
clock

தோல்வி பயத்தால் தவெகவை விமர்சிக்கிறார் இபிஎஸ்! - செங்கோட்டையன்

தோல்வி பயத்தால் தவெகவை விமர்சிக்கிறார் இபிஎஸ்! - செங்கோட்டையன்


 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயத்தாலேயே தவெகவை விமர்சிக்கிறார் என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், 'விஜய்க்கு ஒன்றும் தெரியாது, அவர் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்' என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.


இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன் இதுபற்றி,


"அவர்கள் தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும்தான் இதுபோன்ற கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் திமுகவின் 'பி' டீமாக யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர்போல நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை, அவர் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும்.


ஆனால், தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால்தான் இபிஎஸ் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்.


தேர்தல் அறிக்கை மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஆனால், தினமும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை வெளியிடும்போதே அவர்கள் எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News