news Breaking News
clock

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை; பிரதமர் மோடியுடன் சந்திப்பு


 

மும்பை,


தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று தொடங்கியது. இந்த ஏஐ உச்சி மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.


இந்த உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டின் ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்பட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று வந்துள்ளார். அவர் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்தார். மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி - இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு நடைபெற்றது.


இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


இதனை தொடர்ந்து மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஓட்டலில் நடைபெற்று வரும் இந்தியா - பிரான்ஸ் கூட்டமைப்பு கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.


மும்பை பயணத்தை நிறைவு செய்யும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை டெல்லி செல்கிறார். அங்கு நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News