
தலை பிரசவம்....
அரை மயக்கத்தில் _ என்
கடவுளின் அழுகுரல்.....
மாமியாரின் நமுட்டு பேச்சு
மம் ம்ம் பெண் பிள்ளை....
ஓ.....
என் வீட்டு ஒளி தெய்வம்.
மனதெல்லாம் மத்தப்பூக்கள்...
கண் திறந்து
முதல் முறை பார்த்த நொடியில்...
முழு மதியாய்....
முக்கனியின் சுவையாய்.....
முத்தத்தின் பேரின்பமாய்....
மலரிதழை விட மென்மையான...
பட்டு மேனியை..
தொட்ட தருணத்தில்...
மேனியெங்கும்....
தாண்டவமாடிய....
தாய்மையின்....
தலைக்கேறிய... போதையை....
உணர்த்திடமுடியாது.......
பேரின்பதின் கடலே
என்றுமே...
நீ எனக்கு.....
துடிக்கின்ற என்னிதயம்
துன்புறாமல். ...
காக்கின்ற _ என்
கடவுள்........
புனித ரோஸி
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%