🌹💖
*🌹✍️
*உன்*
*பார்வை சூரிய பார்வை என்று*
*ஊரெல்லாம் பறை சாற்றுகிறார்கள்!*
*நான்*
*உன்*
*அருகில் வரும் போது மட்டும்*
*நீ*
*மாலைமதியாவதன் மர்மத்தை*
*இவர்களுக்கெல்லாம்*
*எப்பொழுது சொல்லலாம்?!*
*என்னைச்*
*சந்திக்க வரும் தினங்களில்*
*நீ*
*உன்*
*கண்களிலுள்ள தோட்டாக்களை*
*வீட்டில் வைத்து விட்டு வரும் காரணம்*
*ஒன்றிற்காகவே*
*உனக்குக்*
*கூடுதல்*
*மு த் த ங் க ளு க் கு*
*இதழொப்பமிடுகிறது*
*என்*
*கா த ல்*
*உ த டு க ள்!*
*நீ*
*அணைக்கும் போது ஒன்றாகவும்*
*விலகும் போது ஒன்றாகவும்*
*மாறுகிறது*
*என்னைச்*
*சுற்றியுள்ள தட்ப வெப்ப நிலை!*
*நானிருக்க*
*பயமேன்?*
*என்று சொல்கிறது*
*என்*
*அ ன் பு*
*அ த ர ங் க ள்!*
*நீயிருப்பதால்*
*தான் அச்சமே என்று*
*அலறுகிறது*
*உன்*
*கா த ல்*
*க ண் க ள்!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?