மியான்மரைச் சேர்ந்த 11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை

மியான்மரைச் சேர்ந்த 11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை


 

பாங்காக்: மியான்​மர், கம்​போடி​யா, லாவோஸ் ஆகிய நாடு​களில் டிஜிட்​டல் மோசடி, சூதாட்​டம் ஆகியவை மிகப் பெரியள​வில் நடை​பெறுகிறது.


சீனா-மியான்​மர் எல்​லை​யில் செயல்​படும் ஒரு கும்​பல் 1 பில்​லியன் டாலரை விட அதிக மதிப்​பில் சூதாட்​டம் மற்​றும் டிஜிட்​டல் மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளது. மேலும் சீனர்​கள் 14 பேர் இந்த கும்​பலால் கொலை செய்​யப்​பட்​டுள்​னர்.


இந்த கும்​பலில் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 11 பேரை கடந்த 2023ம் ஆண்டு நவம்​பர் மாதம் சீன அதி​காரி​கள் கைது செய்​தனர். இவர்​களுக்கு கடந்​தாண்டு செப்​டம்​பரில் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து இவர்​கள் மேல் முறை​யீடு செய்​தனர்.


இதை சீன நீதி​மன்​றம் நிராகரித்​தது. இதையடுத்து சூதாட்ட கும்​பலைச் சேர்ந்த 11 பேருக்கு மரண தண்​டனை நிறைவேற்றப்பட்டதாக நீதி​மன்​றம்​ நேற்​று அறி​வித்​தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%