முதியோரைப் போற்றுவோம்

முதியோரைப் போற்றுவோம்


முதியோரை போற்றி 

  வாழாத உலகே..

முறைதானா உன்செயல்

   அறியாயோ.!

இதுஎன்ன நாடோ.?

  சிலந்தியின் கூடோ.!

உயிர்தந்த பெற்றோர்

  உன் சுமைதானோ?


தெருவெங்கும் முதியோர்கள்.. நாளும்

கையேந்தி திரிந்தாரே.!

குரங்குகளைப் பாராய் குடும்பமாய் வாழும்!

மனிதா நீ திருந்துவாயோ?

முதியோரைக் காப்பாயோ.!


அவன் கட்டும் இல்லத்திற்கு..

*அன்னை இல்லம்* என்ப்

 பெயர் வைத்தான்!

அம்மாவும் அப்பாவும் எங்கே என்றாலோ...

*அநாதை இல்லம்*

சேர்த்தான்!


பெரியோரை மதித்தானா.. மனிதன்

முதியோர் சொல் கேட்டானா.. குரங்கென்னைப் பாராய்

வயிற்றினில் சுமக்கும் குணம் கொண்டு வாழ்வாயோ.!


  (மெலியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் மாறாதோ? என்ற மெட்டில் பாடி பழகுக!)


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%