பூமித்தாயின் கருவறையில்
பூத்து வந்த பொக்கிஷம்
வான மழை உள்வாங்கி
வளர்ந்து நின்ற மண்வளம்
வியர்வை உப்பை உள்வாங்கி
அகப்பை நிறைத்து
உயிர் வளர்க்கும்
பச்சை ஆடை மேனியில்
பருவப் பெண்ணாய்
வளந்து
ஆதவனின் அரவணைப்பில் அறுவடைக்குத் தயாராகும்
வேறுபாடில்லை
வேண்டியதை வளர்த்தெடுக்கும்
உழவனின் உயிர் காக்கும்
உன்னத அமுதம்
இயற்கையெனும் இறைவன்
வான் மழை தப்பினும்
உழைப்பின் வியர்வையில் பயிர் வளர்க்கும்
அதிகாலைச் சூரியனின்
அகம் மகிழ்ந்த கதிர் விரிப்பும்
சிறகு விரித்த
பறவைகளின் சிங்காரக் குரல் ஒலியும்
கவலை தீர்க்கும் அருமருந்து
அறிவியல் மோகத்தில்
அவசர காலத்தில்
அழிந்து வரும் வயல்வெளிகள்
மனிதன் தேடும்
மரண வழிகள்
வயல் காத்தால்
வாழ்க்கை சுகமாகும்
வயல் அழித்தால்
வாழ்வே துயராகும்.

தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?