அன்புடையீர்,
வணக்கம் 2.9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்ற செய்தி அரசியலை மிக அழகாக சொன்னது. இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனமார்ந்த பாராட்டுக்கள்.
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். மாணவ மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை செய்தி மிகவும் அருமை. அய்யா வைகுண்டர் தலைமைப்பதி தேரோட்டம் மிக அற்புதமான கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
நல்ல செயற்காரியங்களுக்கு வெற்றிலை பயன்படுத்துவது போல நலம் தரும் மருத்துவ பகுதியில் வெற்றிலையின் பயன்களை படித்ததும் அதில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்று புரிந்தது. இனி வெற்றிலை அதிகமாக உபயோகித்து ஆரோக்கியமாக வாழ தீர்மானித்தேன் மனமார்ந்த பாராட்டுக்கள்.
விநாயகர் சிலைகள் கரைத்து பட்டினப்பாக்கம் கற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்ற ம் இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த கழிவுநீர் என்ற செய்தி மிகவும் அருவருப்பாகவும் மக்களை கஷ்டத்திலே வாடிய செய்தியாக படிக்க வைத்தது .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த நசீம் மிர்சா சாங்கேசி வரலாறு மிகவும் அருமை. அவருடைய புகைப்படத்துடன் படிக்கும்போது நல்ல வரலாற்று செய்தியாக மனித உரிமை தந்தது .
பல் சுவை களஞ்சியம் பகுதி வழக்கம் போல் கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் படிக்க வைத்தது ஜோக்ஸ் மிகவும் அற்புதம் ரசித்து படித்து மகிழ்ந்தேன். சமையலறை ஸ்பெஷல் மிகவும் அருமை.
அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்திய படமும் சரி மிகவும் அருமை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
கேரளாவில் மூலிகை தின்னும் அமீர்பாவால் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. 32 ஆண்டு கால உழைப்பை ஊறிஞ்சி தூக்கி எறிந்து விட்டீர்களே என்று வைகோ அவர்களுக்கு மல்லை சத்தியா கடிதம் எழுதியது அரசியலை மிக அழகாக புரிய வைத்தது ..
பஞ்சமி நிலத்தை மீட்டு நிலம் அற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற சிபிஎம் அவர்களின் செய்தி அரசியலை மிக அழகாக சொன்னது. 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது .
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் எட்டாம் தேதி நடக்கும் என்று டெல்லியில் நடப்பதை மிக அழகாக சொன்னது ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம் இந்திய ராணுவம் அசத்தலாக செய்து மிகவும் ஆர்வ ஆச்சரியத்துடன் படித்து ரசித்தேன்.
வரிவிதிப்பு இல்லாவிட்டால் அமெரிக்கா முழுமையாக அழிந்து விடும் என்று கோர்ட்டு கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் சொன்ன பதிலை படித்தது கேள்விகளுக்கு விடை அளிப்பது போல இருந்தது ..
அனைத்து பக்கங்களிலும் மிக அருமையான தகவல்களை கொடுத்து நல்ல அற்புதமான சந்தோஷமான விடியலாக அமைய உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்