வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 20.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 20.09.25


அன்புடையீர்,


 வணக்கம். 20.9.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திய செய்தி மிகவும் அருமையான தகவல். பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மிக்க நன்றி..


திருக்குறள் மிகவும் அற்புதம்.. அதன் பொருளை புரிந்து கொண்டு படிக்கும் போது ஒரு மன நிறைவும் திருக்குறள் வகுப்பில் இருப்பது போலவும் தோன்றுகிறது நாமக்கல் கோ ஆப் டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி விற்பனை ரூபாய் 90 லட்சம் இலக்கு என்று ஆவலுடன் தீபாவளிக்கு நல்ல தகவலை சொன்னது பாராட்டுக்கள் .


பொதுவாக மக்களுக்கு வரும் இடுப்பு ஆரம்பித்து கால் வரை வலி வருவது சகஜம். அதுபோன்று வந்தால் நமக்கு என்ன செய்யலாம் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஒரு ஆலோசனை சொன்னது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


திருத்தணியில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஜெனரேட்டர் கொடுக்கப்பட்ட செய்தி மிகவும் அருமை. இந்த நல்ல தொண்டு உள்ளம் கொண்ட வங்கிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வரும் சர்தார் சிங்ஜி ராவாஜி ராணா அவர்களின் வரலாறும் அவர்களுடைய புகைப்படமும் மிக அற்புதமான தகவலாக இருந்ததா ஒரு முறை அல்ல இரண்டு முறை படித்து மகிழ்ந்தேன்.


பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை அதில் வரும் மீம்ஸ் ஒவ்வொரு நாளும் புதுவிதமாக இருப்பதால் ரசனையுடன் பார்த்து சிரிக்க வைக்கிறது.மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


 வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் வந்து அனைத்து தகவல்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவுவது மனமார்ந்த பாராட்டுக்கள் .


தமிழ்நாடு இ பேப்பர் டாட் காமின் 16ம் பக்கம் என்றாலே பரவசம் மட்டும் செய்திகளை கொடுக்கும் ஆன்மிக தகவல்களும் படங்களும் மிகவும் அருமை. இன்று வந்த திருவத்திலை வெங்கடாஜலபதி கோவில் கொடியேற்றம் என்று பல செய்திகளை மிக அருமையான தகவல்களாக சொன்னது பாராட்டுக்குரியது .


சுற்றுலா பக்கத்தில் வந்த உலக அளவில் அதிகம் பேர் விரும்பும் முதல் ஐந்து நாடுகள் என்று பட்டியலிட்டு சொன்னது மிகவும் அருமை. அதில் அமெரிக்கா சீனா இத்தாலி போன்ற நாடுகளை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது . அந்த நாடுகளில் சிலவற்றைப் பார்த்து அனுபவத்தை நினைத்து மகிழ்ந்தேன். 


வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் தேர்தல் கமிஷன் அறிவித்தது மிகவும் அருமை அதனால் நான் விரும்பியவர்களை எளிதாக பார்த்து தேர்ந்தெடுத்து ஓட்டளிக்கலாம் என்று ஆவலுடன் படிக்க வைத்த செய்தி பாராட்டுக்கள்.


அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. த

சீர்திருத்தத்தால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கையுடன் பேசியது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும் ஒரு ஒப்பந்தத்தில் திருடப்பட்ட செய்தியை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. காசா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம் காட்டியது அயல்நாட்டில் நடப்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியது மனமார்ந்த பாராட்டுக்கள்.


சனிக்கிழமை விடியலை சந்தோஷ விடியலாக அமைய அருமையான செய்திகள் மிக அழகாக தொகுத்து கொடுத்த தமிழ்நாடு ஈ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%