அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில்
சிக்கி உள்ளது என சுதர்சன ரெட்டி
அறிக்கை. பித்தபையில் கற்கள்
உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிட
கூடாது. திருச்செந்தூரில்
ஆவணி திருவிழா கொண்டாட்டம்.
மதுரை மாநாட்டுக்கு எத்தனை
தடைகள் ஏற்படுத்தினார்கள் என்று
விஜய் விளக்கம் கொடுத்தார்.
சின்னஞ்சிறு கோபு அவர்களின்
கையில் கம்புடன் வந்த ஆசிரியர்
கவிதை சிந்திக்க வைத்தது.
செவ்வாழை பழத்தின் பயன்கள்
அற்புதமாக இருந்தது. குடிதண்ணீரை
எத்தனை நாட்கள் சேமித்து
வைக்கலாம் என்ற கட்டுரை
நல்ல பயனுள்ளதாக அமைந்தது.
தெரு நாய்களுக்கு கருத்தடை
செய்ய 2400 கோடி செலவாகும்.
இந்தியாவில் ஜனநாயக
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பதவி பறிப்பு மசோதாவில்
பிரதமர் பதவி இடம் பெறவில்லை.
ரணில் விக்ரம் சிங்கே கைதுக்கு
ராஜபக்சே கண்டனம். சூரியன் கூட
உதிப்பதற்க தாமதமாகலாம்
.
ஆனால் தமிழ்நாடு இ பேப்பர்
என்றுமே தாமதமானது கிடையாது.
தெய்வம் இதழ் கிடைக்கப்பெற்றேன்
மிக்க மகிழ்ச்சி. இதேபோன்று
ஒவ்வொரு வாசகரும் தெய்வம்
இதழுக்கு சந்தா கட்டி ஆதரவு
அளித்து ஆன்மீக நடை போட
வேண்டும் என அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் நாளை சந்திப்போம்.

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?