news Breaking News
clock

*இடுக்கண் களைவதாம் நட்பு*!

*இடுக்கண் களைவதாம் நட்பு*!



(நிலைமண்டில

           ஆசிரியப்பா)


அன்பால் மனமும்

அழகாய் மலர்ந்து

இன்பால் இருவர்

இனிய நட்பை


அரிதாய்க் கொண்டே

ஆருயிர்ப் பேணி

உரித்த முறையில்

உண்மையில் காண்க!


நிலவின் பிறையே

நிறைவது போல

கலையாய் அமைந்து

காண வேண்டும்!


தீய வழியில்

தேரா முறையில்

நேய மின்றி

நேர்ந்திடும் போது


ஏய உணர்வாய்

எழுச்சி கொண்டே

ஓயா துணர்த்தி

ஓதவே வேண்டும்!


ஆடை அவிழ்ந்தால்

அதையே பிடிக்கும்

ஓடும் கையாய்

உணர்த்த வேண்டும்!


கற்குந் தோறும்

காணும் இன்பமாய்ப்

பொற்புடன் விளங்குக

பொலிவாம் நட்பே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News