*சிலையைச்* *செதுக்கச் சிறப்பு*!

*சிலையைச்*  *செதுக்கச் சிறப்பு*!



நேரிசை வெண்பா!


சொல்லில்

கலைவண்ணம்

சொல்கவிதை

யாகுமே!


கல்லில்

கலைவண்ணம்

கண்டாரே...

ஒல்லும்


விலைமதிக்க

வொண்ணாத

வெற்றியைக்

கொள்ளும்


*சிலையைச்*

*செதுக்கச்*

*சிறப்பு*,



விரலின்

வடிவமைப்பு

வீரமுடன்

காணும்!


கருங்கல்லே

ஆகுமே

கனிவு...

உருவமாய்


சிற்பியின்

எண்ணம்

சிலையாய்ப்

பொலியுமே

பொற்பாய்த்

திகழும்

புரி!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%