*சூரிய புத்திரன் தன்வீர்*

*சூரிய புத்திரன் தன்வீர்*



நிராகரிப்பால் நிறைந்து இருந்த

நதியில் சூத்திரதாரியின்

சொல்லில் வந்து விழுந்தது

அன்பின் கல்! 


கவசம் தரித்த கொடையாளன்

பொருள் அல்லாமல்

வாக்காய் கொடுத்தான்

அறுவர் அல்லாமல் ஐவர் 

நிச்சயம் உண்டு என! 


தாயின் மடியை பார்க்காதவன்

தந்தையின் வெப்பத்தை கிரகிக்காதவன் கொடுத்தே 

சிவந்த கைகளுக்கு சொந்தக்காரன்

அங்க தேசத்தின் அரசன்! 


அன்பை மதிப்பை பெற ஏங்கியவன் 

பார்வைக்கு கிட்டியது நிராகரிப்பு

நிராகரிப்பால் நிறைந்த அவன்

வாழ்க்கை நிராகரிப்பால் நின்றது! 


கர்ணன் சக்கரம் மீட்டும் வேளையில்

பொறு என! சூத்திரதாரியின்

சொல் கேட்டு பார்த்தன் 

பதித்தான் கணைகள்! 


கவசம் இல்லா அவன் மார்பையும் துளைக்காமல் தோல்வியுற்றது கணைகள்! 


தன்னை வந்தடைந்தவர்களுக்கு

கொடுத்தே வாழ்ந்த கரங்கள் 

கணைகளுக்கு தன் உயிரையும்

தானம் கொடுக்க! 


சுதபுத்திரன் சூரிய புத்திரன்

தந்தையின் ஒளியில் கலந்து

காலத்தோடு இணைத்து 

புகழ் ஆனான்!



*நா. சதீஸ்குமார்*

*தேவகோட்டை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%