~~~~~~~~~~~~~~~~~~
எழுதி எழுதி.. எழுதி எழுதி.. எழுதிப் பழகுவேன்.!
அமுத தமிழை தினமும் எழுதி வணங்கி மகிழுவேன்.!
தொழுது தொழுது தூயத் தமிழை தொடர்ந்து எழுதுவேன்!
துயரம் யாவும் மாற்றும் தமிழைப் பணிந்து மகிழுவேன்.!
உழுது உழுது எனது நிலத்தில் தமிழை ஊன்றுவேன்.. உலகம் முழுதும் தமிழின் விதையை விதைத்து வணங்குவேன்.!
விழுது விழுது ஆலமரத்து விழுது ஆகுவேன்.. பொழுது மலர புதிய தமிழில் கவிதை வழங்குவேன்!
அமிழ்து அமிழ்து தமிழே அமிழ்து.. அள்ளிப் பருகுவேன்! பழுது நீக்கும் அமுதக் கவிகள் படைத்து மகிழுவேன்.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%